கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி வெளியுறவுத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் அரிந்தம் பாக்சி, மேல்முறையீட்டு மனு மீது நீதிமன்றத்தில் இதுவரை மூன்று விசாரணைகள் நடைபெற்று உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் உள்ள இந்திய கடற்படை வீரர்களை சந்திக்க தோகாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.