8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை.. கத்தார் அறிவிப்பு

வியாழன், 26 அக்டோபர் 2023 (17:11 IST)
கத்தாரில் 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை  அறிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
 
கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை  வீரர்களுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கத்தாரில் உளவு பார்த்ததாக 8 பேரும் கடந்த ஓராண்டாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை  அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
 
இந்திய போர்க்கப்பலில் பணிபுரிந்த அனுபவம் பெற்று, பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கத்தாரில் உள்ள அல்தஹ்ரா சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டன்சி சேவை என்ற தனியார் நிறுவனத்தில்  8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் பணிபுரிந்தனர். 
 
அவர்கள் வேலை செய்த நிறுவனம் கத்தார் ஆயுதப்படையினருக்கு பயிற்சி அளித்த நிலையில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதான இந்தியர்களின் ஜாமின் மனு பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்