ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆக்கிரமிப்பால் அரசு கவிழ்ந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை தலீபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து புறப்படும் சொற்ப விமானங்களிலும் எப்படியாவது தப்பி பிழைத்து விட எண்ணி பலர் அடைக்கலம் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவம் விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது அமர்ந்திருப்பதுமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தஞ்சம் கேட்டு ஆப்கன் மக்கள் பலர் விமானத்தை சுற்றி ஓடிவருவதாகவும், மறுபுறம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதை கொண்டாடும் விதமாக தலீபான் ஆதரவாளர்கள் அதை சுற்றி கோஷமிட்டு கொண்டாடுவதாகவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.