ஆப்கானிஸ்தானில் உலமாக்கள் கூட்டத்தில் தற்கொலை படை தாக்குதல்; 7 பேர் பலி

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (15:41 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று நடைபெற்ற மதத்தலைவர்கள் அமைதி குழு கூட்டத்தை குறிவைத்து நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

 
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுமார் 3 ஆயித்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டனர். 
 
கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தலில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலை கிடமாக உள்ளதாகவும். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்