ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (09:01 IST)
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் தான். ஃபேஸ்புக் அளவிற்கு டுவிட்டர் லாபகரமாக இல்லை என்றாலும் டுவிட்டருக்கு என்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.



 
 
இந்த நிலையில் நேற்று திடீரென ஃபேஸ்புக் சில மணி நேரம் நிலை தடுமாறியது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் நுழைய முடியாமல் அதன் பயனாளிகள் தவித்தனர். ஃபேஸ்புக் முடங்கியதற்கு என்ன காரணம் என்று டுவிட்டரில் அனைவரும் கேள்வி கேட்டனர்\
 
இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் இணையதளத்தில் சிறு தடங்களில் உள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் ஃபேஸ்புக் சேவை தொடரும் என்று செய்தி வெளியிட்டிருந்தார். ஃபேஸ்புக் உரிமையாளர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது அனைவரையும் ஆச்சரிப்படுத்தியது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்