எனக்கே விபூதியா? ட்ரம்புக்கு வந்த விஷம் தடவிய கடிதம்! – அமெரிக்காவில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (13:42 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது. வழக்கமான சோதனையின்போது கடிதத்தில் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஷ கடிதம் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்