தட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (16:46 IST)
சமைத்து தட்டில் வைக்கப்பட்ட கறித்துண்டு ஒன்று தட்டிலிருந்து தாவி தப்பியோடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்று பலர் ஆச்சர்யப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

ஃப்ளோரிடாவை சேர்ந்த ரை பிலிப்ஸ் என்பவர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். ஒரு உணவகத்தில் மேசையில் உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் கோழிக்கறி துண்டுகளும் ஒரு தட்டில் இருந்திருக்கின்றது. திடீரென அதிலிருந்து ஒரு கறித்துண்டு நகர்ந்திருக்கிறது. அதை பார்த்த சமையல்காரர் அதை மற்றவர்களிடம் கூறியிருக்கிறார்.

அப்போது நகரத்தொடங்கிய அந்த கறித்துண்டு கை, கால்கள் கொண்ட ஒரு ஏலியனை போல நடந்து சென்றது. பிறகு ஒரே தாவாக தாவி மேசையிலிருந்து விழுந்தது. இதை பார்த்து அங்கிருந்த சிலர் அலறினர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் எந்த உணவகத்தில் நடந்தது என்பது தெரியவில்லை. பக்கத்தில் உள்ள தட்டில் சாப்பிட மரக்குச்சிகள் வைக்கப்பட்டிருப்பதால் சைனீஸ் அல்லது தாய்லாந்து உணவகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சுமார் 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். சுமாராக 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்