தேசிய விருது பெற்ற இயக்குனருக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர்-எதிர்க்கட்சி தலைவர்

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (16:30 IST)
இந்தியாவில் மதம் சார்ந்த கொலைகள் அதிகம் நடப்பதை தடுக்க வேண்டும் என பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியானது தெரிந்ததே. இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த 49 பேர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் 61 பேர்கள் இவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதி ஒன்றினை எழுதி இருந்தார்கள். அதில் பிரபல நடிகை கங்கனா ரனாவத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 49 பேர் எழுதிய கடிதத்தில் பிரபல மலையாள இயக்குனரும், தேசிய விருது பெற்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஒருவர். இவர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதற்காக கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை கேட்க முடியாவிட்டால் நிலவுக்கு சென்று விடுங்கள் என்று பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகிய இருவரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு திரைப்பட இயக்குனருக்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்