பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (17:39 IST)
அமெரிக்க நாட்டில்  ஆறு வயது சிறுவன் ஒருவன் பள்ளி ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க நாட்டின் விர் ஜினியா மாகாணத்தின்   நியூபோர்ட் நியஸ் என்ற பகுதியில் ரிக் நெக் என்ற பெயரில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில், 30 வயதுடைய ஒரு ஆசிரியை பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் அப்பெண்ணிற்கும் இடையில் பள்ளியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில், ஆத்திரம் அடைந்த சிறுவன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை ஏடுத்து, ஆசிரியை சுட்டதாகவும், இதில், ஆசிரியர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, பெண் ஆசிரியை ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸார், 6 வயது சிறுவனை காவல் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்