ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணி நீக்கம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (07:30 IST)
ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணி நீக்கம்: அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நாளில் 50 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அங்குள்ள முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் 50 தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்குப் பதிலாக மத குருமார்களை பேராசிரியராக நியமனம் செய்து உள்ளனர் 
 
பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களில் 3 பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் முப்பத்தி ஆறு பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றும் 10 பேர் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பட்டம் பெற்ற பேராசிரியர்கள் நீக்கிவிட்டு மத குருமார்களை பேராசிரியராக தாலிபான்கள் நியமித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்