அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்கள் எவ்வளவு? அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (08:08 IST)
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்கள் எவ்வளவு?
சீனாவின் வூகான் என்ற மாகாணத்திலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்தாலும் தற்போது வூகான் மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பி போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் ஒரு சில நாடுகளில் மட்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக உலகிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருப்பது அமெரிக்காவில்தான். அமெரிக்க அரசும் அமெரிக்கர்களும் கொரோனாவை எதிர்த்து போரிட முடியாமல் திணறி வருகின்றனர்
 
இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 18,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 255 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2470 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,41,854ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் 24 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் கோரத்தாண்டவம் ஆடி வருவது உறுதியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்