நெடுஞ்சாலையில் புழுதி புயல்... அடுத்தடுத்து மோதிக்கொண்ட 22 வாகனங்கள்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (11:11 IST)
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேரிட்டது. 

 
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில் அங்கு திடீரென பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு புழுதி‌ புயல் உருவானது. இதானல் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின.
 
இதில் அடுத்தடுத்து மொத்தம் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்