தைய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலி; ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவு

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (10:19 IST)
தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் குடியிருப்புகள் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர் மேலும் 114 பேர் காயமடைந்துள்ளனர்.
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தைவானில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட நிலையில், தற்பொழுது 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட 4 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரிடர் மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்