மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2018-2019 ஆம் நிதி ஆண்டிற்கான பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை கண்டுகொள்ளாத பட்ஜெட் என்ற விமர்சனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த பட்ஜெட் குறித்த தனது கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் மத்திய பட்ஜெட்டால் நாட்டு மக்களுக்கோ, நாட்டு வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக மக்களின் நலன்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தி தரும் விதமாக உள்ளது என்று தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.