மக்களிடம் சிக்கிக்கொண்ட தினகரன்: பெருகும் ஆதரவு!

சனி, 3 பிப்ரவரி 2018 (12:26 IST)
எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு செல்லும் என கூறிவரும் தினகரன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை எதிர்த்து மக்களை சந்திக்கும் தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார்.
 
தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் நேற்று மாலை தனது மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கிய தினகரனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் வெள்ளத்தில் சிக்கி தினகரன் மிதந்து வருகிறார்.
 
பிற்பகலில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்ட தினகரன் சோழபுரம் பேரூராட்சிக்கு வருவதற்குள் திணறிவிட்டார். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம். ஜெயலலிதா பாணியில் திறந்த வேனில் நின்றபடி தனது மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஆரம்பித்தார்.
 
தினகரன் தனது முதல் உரையை ஆரம்பிக்க மேடை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் அவரால் வேனில் இருந்து மேடைக்கு செல்லமுடியவில்லை. இதனால் வேனில் நின்றபடியே தனது உரையை ஆரம்பித்தார் தினகரன்.
 
தினகரனின் இந்த சந்திப்பின் போது ஓவ்வொரு நிறுத்தத்திலும் மக்கள் பெருமளவில் குவிந்தனர். சில இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி அணியின் கொத்தாக தினகரன் அணியில் அவர் முன்னிலையில் இணைந்தனர். இந்த பயணத்தின் போது மக்கள் மத்தியில் தினகரன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார். டெல்லியில் நிழல் அரசு என குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்