துருக்கி நிலநடுக்கம் எதிரொலி.. 184 கட்டுமான நிறுவன அதிகாரிகள் கைது..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:09 IST)
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் காரணமாக சுமார் 50,000 பேர் பலியானார்கள் என்பதும் 1000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வலிமையான கட்டிடங்களை கட்டவில்லை என கட்டுமான நிறுவன அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து துருக்கி அரசு விசாரணை செய்தபோது பல கட்டுமான அதிகாரிகள் முறைகேடு செய்து கட்டிடங்களை கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் துருக்கியில் கட்டுமான பணியில் ஊழல் செய்ததாக சுமார் 600க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதில் 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் மோசமான கட்டுப்பாடு பணிகளை இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து துருக்கி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்