தண்ணீருக்குள் உருவாகி வரும் அவதார்; ஜேம்ஸ் கேமரூன் தகவல்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (16:37 IST)
அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் காட்சிப்படுத்த உள்ளதால் ஆழ் கடலில் படம் எடுக்கப்பட உள்ளது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.


 


 
அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் ரீலிஸ் குறித்து ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
 
2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சினிமா தொழில்நுட்பத்தில் பெரும் சாதனை படைத்தது அவதார் திரைப்படம். இதைத்தொடர்ந்து இரண்டாம் உருவாகி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. அண்மையில் அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் ரீலிஸ் குறித்து தகவல் வெளியானது.
 
இந்நிலையில் தற்போது அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
 
அவதார் உலகம் அடுத்த பாகங்களில் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல எடுக்கப்பட உள்ளது. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது, என்றார்.
அடுத்த கட்டுரையில்