பாசிப்பருப்பு - 100 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
பால் - 500 மில்லி
தண்ணீர் - 500 மில்லி
கல்கண்டு - 200 கிராம்
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
முந்திரி - 20 கிராம்
திராட்சை - 20 கிராம்
செய்முறை:
அரிசி, பாசிப்பருப்பை, தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து வேக வைக்கவும். இதில், கல்கண்டுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து, கல்கண்டு பொங்கலில் சேர்க்கவும்.
2. மொச்சை சுண்டல் செய்ய !!
தேவையான பொருட்கள்:
காய்ந்த மொச்சை - 500 கிராம்
எண்ணெய் - 20 மில்லி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 150 கிராம்.
செய்முறை:
காய்ந்த மொச்சையை எட்டு மணி நேரம் ஊற வைத்து, வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் வறுக்கவும். இதில், வேக வைத்த மொச்சை, உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும். சுவையான மொச்சை சுண்டல் தயார்.