தக்காளி தோசை செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தோசை மாவு - 2 கப்
தக்காளி - 2 நன்கு பழுத்தது
வரமிளகாய் - 5
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டு - 10 பற்கள்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 4 கொத்து (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை -  சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் தக்காளி, வரமிளகாய், இஞ்சி,  பூண்டு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ளதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

பின்னர் சிறிதளவு உப்பு சேர்க்கவும். பிறகு ஆற வைக்கவும். ஆறியதும் தோசை மாவில் கலக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் லேசாக தடவி தோசை வார்க்கவும். சுவையான தக்காளி தோசை தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்