உடல்நலம் காக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:58 IST)
தினமும் நம்முடைய உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவக்குணங்களும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பல இயற்கை பொருட்களிலும் மூலிகைலிகளிலும் இருக்கிறது.

துளசி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்த துளசி சாறை நீங்கள் தினமும் குடித்து வந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்க முடியும்.

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் பூண்டை தோல் நீக்கி நசுக்கி அதனுடன் தக்காளி உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் வைத்து குடித்தால்  உங்களுடைய நெஞ்சு சளி இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விடும்.

உங்களுக்கு வாய் புண் இருக்கா, கொப்பரை தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. வாய் புண் அப்படியே மறைந்துவிடும்.

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் நோஞ்சானாக மெலிந்து ஒல்லியாக காணப்படுவார்கள். இவர்கள் கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து 40 நாள்கள் சாப்பிட்டு வாங்க.  உங்கள் உடல் பருமனாகும்.

வயிற்று போக்கு தொடர்ச்சியாக இருப்பவர்கள் பப்பாளிப்பழத்தை சாப்பிட வயிற்று போக்கு உடனடியாக குணமாகும்.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வாருங்கள். உங்கள் மார்பு சளி குறையும். கூடவே சோர்வு நீங்கி புத்துணர்ச்சியோடு நாள்முழுவதும் இருக்க முடியும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்