புளியை கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ளவேண்டும். பின்னர் அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, தனியா, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக சேர்த்து வறுத்து இறக்கி, ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடிசெய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் என்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விடவேண்டும் அடுத்து அதில் புளிச்சாறு சேர்த்து கிளறவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். கடைசியாக அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும். சுவையான வற்றல் குழம்பு தயார்.