வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும், புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். பின் கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கி ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை பாகற்காயின் உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டி விடுங்கள். வாணலியை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயை போட்டு வேகவையுங்கள். 15 நிமிடங்கள் வேக வேண்டும். 3 நிமிடத்துக்கு ஒருமுறை பாகற்காய்களை திருப்பி விடவேண்டும். பச்சைநிறம் மங்கி வெந்ததும் இறக்குங்கள். அவ்வளவுதான் ஸ்டப்டு பாகற்காய் தயார்.