200 கிராம் காளானை மண் இல்லாதவாறு சுத்தமாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும். இப்போது 65 மசாலாவை தயார் செய்ய, ஒரு பவுலில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவு, சோள மாவு 1 1/2 மேசைக்கரண்டி, அரிசி மாவு 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
மாவானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். பின்பு பிசைந்த மாவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
15 நிமிடம் நன்றாக மசாலாவில் காளான் ஊறியதும், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடேனதும், பிசைந்து வைத்துள்ள காளானை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான காளான் 65 தயார்.