இனிப்பு பூரணம் கொழுக்கட்டை செய்ய...!!

தேவையானவை: 
 
பச்சரிசி மாவு  -  இரண்டு கப்
தேங்காய் - துருவியது 2 கப் 
கருப்பு எள் - அரை கப் 
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் தூள் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கப்  
எண்ணெய் - 4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு.
பூரணம் செய்ய:
 
ஒரு முழு தேங்காயைத் துருவி வாணலியில் லேசாகத் துருவிக் கொள்ளவும்.  ஒரு கப் எள்ளை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து  வைக்கவும். கால் கிலோ வெல்லத்தை பொடிக்கவும். முதலில் எள் மற்றும் தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றவும். இரண்டும் ஒன்றிரண்டாக பொடிந்த பின், வெல்லத்தை சேர்க்கவும். நீர் எதுவும் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றவும். இப்போது  இனிப்பு கலவை தயார். விரும்பினால் ஏலக்காய் சேர்க்கலாம்.

செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேவையான அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கிளற மரக் கரண்டியை எடுத்துக் கொள்ளவும். மாவு மூழ்கும் அளவுக்கு நீரை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறவும். மூழ்கும் அளவுக்கு சேர்த்தால்  போதும் அதிகப்படியான நீர் வேண்டாம். 
 
கிளறிய மாவு சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக உருட்டி, நடுவில் குழிபோல செய்து அதனுள் இனிப்பு கலவையை அடைக்கவும்.  இப்படி தேவையான உருண்டைகளை செய்து வைக்கவும்.செய்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 3 அல்லது 4 நிமிடம்  வேகவைக்கவும். சுவையான இனிப்பு பூரணம் கொழுக்கட்டை தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்