முதலில் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து மிக்ஸில் போட்டும் வரமிளகாய்,சோம்பு ,மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிய வடைகளை போட்டு பொன்னிறமாக தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வாங்கவும். அதோடு, தக்காளியை தோல் நீக்கி மிக்ஸில் அரைத்து சேர்த்து கொள்ளவும். பின்னர் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். 2 டாப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பின்னர் செய்து வைத்துள்ள வடைகளை சிறிது சிறிதாக கட் செய்து போட்டு, 5 நிமிடம் கொதிக்க விடவும். இதனுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான வடகறி தயார்.