செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அவ்வாறு கலக்கும் போது மாவுக் மிகவும் சாப்டாகவும் திக்காகவும் இருக்க வேண்டும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.
அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும். பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி, வேர்க்கடலை, கறிவேப்பிலை போன்றவற்றை பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும். இப்போது சுவையான காராபூந்தி தயார்.