பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைக்கவும். வடை மாவு கெட்டியாக இருக்கவேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும்.
எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 4 அல்லது 5 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம். பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த உளுந்து வடை தயார்.