அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்றாகவும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான் அளவு உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும். சுவையான சத்தான ஓட்ஸ் அடை தயார்.
குறிப்பு:
ஓட்ஸ் அடையில் தேவைப்பட்டால் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்தும் செய்யலாம். சுவை அற்புதமாக இருக்கும்.