கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம்.
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயின் நடுவில் மெதுவாக உற்றவும். ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும். இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும். சுவையான செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் தயார்.