தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள். பிறகு, இதில் மசித்த தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு, பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
இந்தக் கலவை கொதித்து நன்றாக சுருண்டு எண்ணெய் பிரிந்து மிதந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையும் அதிகம். இவற்றை இட்லி, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் இவற்றுடன் சாப்பிடலாம்.