திருநாவுக்கரசருக்கு வேறு பணி: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (21:02 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கர்சர் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ஆழகிரி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்த கே.எஸ்.ஆழகிரி அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

காங்கிராஸ் கட்சியில் கருத்துவேறுபாடு மட்டுமே இருக்கும் என்றும் கோஷ்டி பூசல் இல்லை என்றும் கூறிய கே.எஸ்.ஆழகிரி, கருத்து வேறுபாடுகள் இல்லாத கட்சி இந்தியாவில் எங்கேயாவது உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இந்த மாதம் தமிழகம் வரவிருப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கே.எஸ்.ஆழகிரி தெரிவித்தார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், தேர்தலில் கூட்டணி, தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திருநாவுக்கரசரின் இரண்டு ஆண்டுகால பணியை காங்கிரஸ் மேலிடம் பாராட்டியதாகவும் விரைவில் அவருக்கு புதிய பதவி வழங்கப்படவிருப்பதாகவும் கே.எஸ்.ஆழகிரி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்