ஸ்டெர்லைட் ஆலையை திடீரென மூட முடிவு: போராட்டம் எதிரொலியா?

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (19:22 IST)
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக இரவும் பகலும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதாலும், கமல்ஹாசன் உள்பட ஒருசில அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி நகருக்கே வந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளதால் தான் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

15 நாட்கள் மூடும் அறிவிப்பை நம்பி போராட்டத்தை நிறுத்த நாங்கள் தயாராக இல்லை என்றும், நிரந்தரமாக இந்த ஆலை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்