தமிழ் மொழியை சனியனே என்று கூறியவர் ஈ.வெ.ரா. : மீண்டும் ஹெச்.ராஜா

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (11:37 IST)
பெரியார் சிலை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்து வாங்கிக் கட்டிக் கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தற்போது பெரியாரை பற்றி சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.  இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்.
 
அதேபோல், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். இந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் அதிவலைகளை உண்டாக்கியது. தமிழகமெங்கும் ஹெச்,ராஜாவிற்கு எதிராக ஆர்ப்பட்டாங்கள் வெடித்தன. அவரின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா “தமிழ் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம். இது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எங்கும் எடுபடவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் திராவிடத்தை திணித்துள்ளனர்.  இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதால் என்னை வசைபாடுகின்றனர். தமிழ் மொழி சனியனே இருக்கக்கூடாது என பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்