இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியபோது இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாக அப்பாவி கர்ப்பிணி பெண் இறப்பு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்த கொடும் செயலுக்கு காரணமான அதிகாரி மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திருவெறும்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. கழக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவையேற்று டி.ஜி.பியிடம் பேசி சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன். அவரும் உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.