மெக்ஸிகோவில் 'இறந்தோர் நாள்' பேரணி

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (20:26 IST)
இது போன்ற பேரணி மெக்ஸிகோ தலைநகரில் நடப்பது இது மூன்றாம் முறை.
குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த ஆண்டு 'இறந்தோர் நாள்' பேரணி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த பேரணி குடிபெயர்தலின் போது

மரணித்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.
 
பேரணியின் ஒரு பகுதியாக மக்கள் 'இந்த பக்கமும் ஒரு கனவு இருக்கிறது' என்ற பெயர் பொறித்த எல்லை சுவற்றை சுமந்து செல்கிறார்கள்.
 
வழக்கமாக நவம்பர் 2 ஆம் தேதிதான் இந்த பேரணி நடைபெறும்.

இறந்தவர்களை கெளரவிப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா நம்முடன் தங்க மீண்டும் வரும் என்பது அம்மக்களின் நம்பிக்கை.

 
இதனை கொண்டாடப்படும் முறை மெக்ஸிகோவில் பகுதிக்கு பகுதி வேறுபடும்.
 
சிலர் மெழுகுவர்த்தி ஏற்றி மூதாதையர்களை நினைவு கூர்வார்கள். சிலர் உணவு படைப்பார்கள், சிலர் மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.
 
மெக்ஸிகோவில் இந்தாண்டு நடைபெற்ற பேரணியில், மழை தூரலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்