ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான "கமனம்" ட்ரைலர்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (14:12 IST)
சுஜனா ராவ் இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண் காது கேளாதோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கமனம்.  ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில்  நித்யா மேனன், பிரியங்கா ஜவல்கர், ஷிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை 5 மொழி திரைத்துறையில் நட்சத்திர நடிகர்களாக சிறந்து விளங்கும் ஜெயம் ரவி, பவன் கல்யாண், ஃபஹத் ஃபாசில், ஷிவராஜ்குமார், சோனு சூட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைதுள்ள இப்படத்தின் டப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்