இசைஞானியின் நவீன இசையில் விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" பட டீசர் !
திங்கள், 30 டிசம்பர் 2019 (11:21 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக திகழ்ந்து வரும் விஜய் ஆன்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் "தமிழரசன் " திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் அருந்ததி புகழ் நடிகர் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். இவர்களுடன் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக அக்கறையுடன் போராடும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள தமிழரசன் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.