ரூ.200 வேண்டாம், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இலவசமாகவே பார்க்கலாம்: ஜீ5 அறிவிப்பு

Webdunia
வியாழன், 19 மே 2022 (12:16 IST)
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ 
 
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது 
 
இந்த நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்றும் இந்த படத்தை பார்ப்பதற்கு ரூபாய் 200 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தது 
 
ஆனால் தற்போது திடீரென அதில் மாற்றம் செய்துள்ளது. ஜீ5 ஓடிடியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இலவசமாகவே பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த மாற்றம் ஏன் என்பது புரியாமல் திரையுலகினர் குழப்பத்தில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்