பிற மாநிலங்களில் 3வது மொழியாக தமிழ்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

வெள்ளி, 13 மே 2022 (20:41 IST)
தமிழகத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்
 
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி மேலும் பேசியதாவது: மத்திய அரசு இந்தியை திணிப்பது போன்ற ஒரு தோற்றத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துகிறது என்றும் ஆனால் அதில் உண்மையில்லை என்றும் தாய்மொழியில் கல்வி பயில செய்வதே தேசிய கல்வியின் நோக்கம் என்றும் கூறினார் 
 
மேலும் மாநில மொழிகளில் பிரதமர் தமிழ் மொழி மீதும் சுப்பிரமணிய பாரதியார் மீதும் மிகுந்த பற்று வைத்துள்ளார் என்றும் கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ் மொழி இல்லாத மாநிலத்திலும் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்திய மக்களுக்கு தமிழ் மொழியின் மகத்துவம் தேவை என்றும் அவர் கூறினார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்