தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜய்65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார் .
இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை தேர்தல் நாள் என்பதால் விஜய் சென்னையில் ஓட்டுபோட்டவுடம் விஜய்65 படக்குழுவினருடன் ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றனர். அங்கு விஜய் மற்றும் அவரது படக்குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் விஜய்65 படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இப்படத்தின் மூன்றில் ஒரு பங்கு ஷூட்டிங் இங்குதான் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் விஜய்65 என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே இவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு நண்பர் என்பதாலும் அவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களில் தலா ஒருபாடல் எழுதியுள்ளார். டாக்டர் படத்தில் அவர் எழுதிய செல்லம்மா பாடல் நல்ல வரவேற்ப்பு பெற்றது குறிபிடத்தக்கது.
மேலும் தியேட்டர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் வரும் முன்னரே இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.