விஜய் சேதுபதி பகிர்ந்த ஷார்ட் பிலிம்…1 மில்லியன் வியூஸ்

திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:59 IST)
சமீபத்தில் வெளியாக நல்லவரவேற்பைப் பெற்றுள்ள இடைவேளை ஷார்ட் பிலிம் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக  நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் ரிலீஸாக க/பெ ரணசிங்கம், விஜயுடன் மாஸ்டர்  உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஸ்ருதிஹாசனுடன் அவர் இணைந்து நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு  வரவுள்ளது.

இந்நிலையில், விஜய்சேதுபதி தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் இடைவேளை. இப்படத்தை கார்த்திக் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். கோவிந்தராஜ் எடிட் செய்துள்ளார். ரெவா இசையமைத்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி ரிலீஸான இப்படம் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்சேதுபதி, இப்படம் வெற்றியடைய வைத்ததற்கு நன்றி எனக் கூறுவது போல் நன்றி எனப் பதிவிட்டு, படம் 1 மில்லியன் பார்வையாலார்களைப் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்