சொல்லுறத கேட்டுனு உருப்படியா இருங்க... இனி ஒரு உயிர் போகக்கூடாது - யோகிபாபு அட்வைஸ்

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (15:12 IST)
கொரோனா வைரஸ் குறித்து கட்டமாக பேசியுள்ள யோகிபாபு வெளியான வீடியோ...!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது காமெடி நடிகர் யோகி பாபுவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுவதாவது, இந்த வைரஸில் இருந்து நாம் அனவைரும் தப்பிக்கவேண்டும் என்றால் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கவேண்டும். கொரோனவால் நிறைய உயிர் போய்டுச்சு... இனி ஒரு உயிர் போக கூடாது எனவே அரசாங்கம் சொல்வதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யோகி பாபு வருகிற ஏப்ரல் 5ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்