தமிழகத்தில் கொரோனா எந்த Stage-ல் உள்ளது? ஈபிஎஸ் விளக்கம்!!
சனி, 28 மார்ச் 2020 (11:34 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு நகருவதாக எடப்பாடி பழமிச்சாமி விளக்கியுள்ளார்.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு 3 ஆம் கட்டத்தை எட்டிவிடக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் தெரிவித்ததாவது...
கொரோனா குறித்து மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். தமிழகத்தில் கொரோனா முதலாம் கட்டத்தில் தான் உள்ளது. கொரோனா தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தை நோக்கி கொரோனா நகர்ந்து வருகிறது.
மேலும் இது அடுத்தடுத்த கட்டத்திற்கு நகராமல் இருக்க மக்கள் வீட்டில் இருக்க வேண்டும். இதனை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.