சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.
லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கேட்ஸ் ஜான் கூறுகையில், வௌவால்கள் வைரஸ்களுடன் போராடும் திறன் கொண்டவை. அவை வைரஸால் தாக்கப்பட்டால் தங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் டிஎன்ஏ கொண்டுள்ளன. இதனால் நோய்களுக்கு உள்ளாவதற்கான முன் அது மீண்டிருக்கலாம். இது இப்போதைக்கு நிலவும் ஒரு கருத்து மட்டுமே என்றார் .
இந்த புதிரில் அடுத்து சந்தேகப்படும் விலங்கு எறும்புத்தின்னி. உலகம் முழுவதும் மிகச் சுலபமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரக்கூடிய விலங்கு. அது மட்டுமல்லாமல் இது அழியக்கூடிய நிலையில் உள்ளது . ஆசியாவில் எறும்புத் திண்ணிக்கு கடும் தேவை இருக்கிறது. சீனாவின் பாரம்பரிய மருந்து ஒன்றைத் தயாரிக்க இவை தேவைப்படுகின்றன. மேலும் இதன் இறைச்சியைச் சீனாவில் பலரும் உண்பர்.