சவுதி ரிட்டர்ன்ஸ் யோகி பாபு… கவனம் ஈர்க்கும் குய்கோ பட டிரைலர்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (07:27 IST)
யோகி  பாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் குய்கோ படத்தை பத்திரிக்கையாளர் அருள்செழியன் இயக்கியுள்ளார். படத்துக்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் தன் தாயின் இறப்புக்காக வருகையில், தன் தாயின் உடலை கெட்டுபோகாமல் பதப்படுத்தி வைத்திருந்த பிரீஸர் பெட்டியை கவனமாக பார்த்துக்கொள்ள, அது ஒரு கட்டத்தில் காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை என இயக்குனர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திடீரென இப்போது இந்த வார ரிலீஸில் குய்கோ திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது குய்கோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப் பூர்வமான கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகியுள்ளதை டிரைலர் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்