நடிகர் யோகி பாபுவுக்கு 2வது குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (12:16 IST)
பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 
 
கடந்த 2020ஆம் ஆண்டு யோகி பாபு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பின் சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது
 
அந்த குழந்தைக்கு விசாகன் என்று பெயரிட்டனர் என்பதும் குழந்தையின் பிறந்த நாள் சமீபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று யோகிபாபு - மஞ்சு பார்கவி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து யோகி பாபு மற்றும் அவரது குழந்தைக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்