பணம், புகழை விட என் குழந்தை தான் முக்கியம்..பிக்பாஸை விட்டு வெளியேறிய ஜி.பி.முத்து

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:37 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஜி பி முத்து நேற்று வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பணம் புகழை விட தனக்கு குழந்தை தான் முக்கியம் என்றும் தன்னுடைய குழந்தையை பிரிந்து என்னால் இருக்க முடியாது என்றும் அதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் ஜி பி முத்து கேட்டுக் கொண்டார்.
 
அவருக்குக் கிடைக்கக்கூடிய பணம் மற்றும் புகழ் குறித்து பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசன் எடுத்துக் கூறினாலும் அவை எல்லாம் விட எனக்கு மகள்தான் முக்கியம் என்றும் அவன் என்னை ஒவ்வொரு நிமிடமும் தேடுவான் என்றும் நான் குடும்பத்தை பிரிந்து இத்தனை நாள் இருந்ததே இல்லை என்றும் நான் போயே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தார் 
 
இதனையடுத்து அவர் வெளியே செல்ல அனுமதிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு பணம் புகழை விட மகனின் எதிர்காலமே முக்கியம் என்று முடிவு எடுத்த ஜிபி முத்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்