தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது - தாய் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (11:25 IST)
கார் விபத்தில் பவானி இறந்ததை யாஷிகாவிடம் இதுவரை கூறவில்லை என்று அவரின் அம்மா சோனல் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

 
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் நடிகை யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சோனல் ஆனந்த் கூறியதாவது, யாஷிகா தற்போது நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி, அவருக்கு தெரியாது. 
 
ஆனால், பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டர்-ல வச்சிருக்காங்கனு சொல்லியிருக்கோம். மருத்துவர்கள் இதுகுறித்த யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்