சென்னை அப்பல்லோவில் யாஷிகா ஆனந்த்: கை, கால் எலும்புகள் முறிவு என தகவல்!

ஞாயிறு, 25 ஜூலை 2021 (14:40 IST)
நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் தற்போது அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மாமல்லபுரம் அருகே விபத்து நடந்த நிலையில் அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பெற்று சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்புகளும், கை கால் எலும்புகளும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும் என்றாலும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து விரைவில் குணமாக ஆக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து யாஷிகாவின் தந்தை சென்னைக்கு வந்திருப்பதாகவும் அவர் தனது மகள் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்