யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

vinoth
சனி, 9 நவம்பர் 2024 (10:46 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷின் அடுத்த படமான டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது.

கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. நயன்தாரா சில பாலிவுட் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது விறுவிறுப்பாக இந்தபடத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்